Saturday, January 30, 2010

உன்னோடு நான் கொண்ட காதல்

அன்பே!
புத்தர் உலகில் தோன்றி
புது மார்க்கத்தைத் தான் உருவாக்கினார்..
நீ என் உள்ளத்தில் தோன்றி
புது உலகத்தையே காட்டி விட்டாய்...!

தனித்திருந்த என் இதயத்தில்
கொத்திக் கொத்தி கூடு கட்டி
குடிபுகுந்து வாழ வந்த
மரங்கொத்திப் பறவை நீயே தான்..!


உன்னை முதன் முதலில் பார்த்த போதே
என்னை நானே மறந்து விட்டென்..
அதனால் தான் என் காதலைக்கூட
உன்னிடம் கூற மறந்து விட்டேன்..!


நீ சென்ற பாதைகளே
நின் காதல் ரயில் செல்லும்
பாதைகளாக மாற்றிவிட்டாய்- பெண்ணே
மாறிவிட்டேன் உன் பாதச்சுவடுகள் தேடும் நீளலாக..!


உயிரே!
உன் முகத்தில் வந்து விழும் கூந்தல் கூட
அழகுதானடி நீ அதனை ஒதுக்கி விடும் போது
ஐயோ! எனக்காக தூதுவரும் காதல் பறவையைய்
ஒதுக்காதே! எனக் கூற வருவேன் - இருந்தும்
நீ ஒதுக்கிவிடும் அழகில் மெய் மறந்து நானும் சிலையாக நின்று விடுவேன்


தூக்கம் கூட என்னை விட்டுத் தூரம்
சென்றுவிட்டதால்
விழித்திருந்தே கண்கின்றேன்.- உன்
விம்பத்தை தினம் கனவிலேயே..

BY-எழில் அரசன் - ஜனா