Tuesday, December 14, 2010

என் காதல் பரிதவிப்பு...!

உன் மௌனங்கள் தான்
என் மரண விழிம்புகள்
விண்னைத் தொட்டுச் சென்றேன் - பெண்னே.!
உன்னை கண்ணால் எட்டும் வரை...!
                         * * *

பல தடவை விழித்திருந்து
பார்க்கிறேன் கனவிலேயே உன்னை.
தனித்திருந்து தவிர்ப்பதற்காகவா.? - பிரம்மன்
தரணியிலே தவழ விட்டான் என்னை...!
                         * * *

பல தடவை எழுந்து நிற்கிறேன்
பள்ளத்தில் வீழ்த்திய - உன்
நினைவுகளில் இருந்து
உள்ளத்தால் தாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னையும் மீறிய உனதழகில்..!
                          * * *

மீண்டும் மீண்டும் உன்னிடமிருந்து
மீளமுடியாமல் தான் கேட்கிறேன்
காதல் பிச்சை - நீயும்
இல்லை என்றே சொல்கிறாய்
என் காதலை
தொல்லை என்றே கொல்கிறாய்...!
                          * * *


நான் விண்னைத் தான்டிப் போகாமல்
உன்னைத் தான்டிப் போகாதோ?
என் இதயம் -ஏன்
முற்பிறப்பின் பளிவாங்கலைப் போல் 
தொடர்கின்றாய்...?
                         * * *

மன்னனாக முடிசூடத்தான்
மாகராணியே அனுமதிக்கவில்லையே - அதுவும்
உன் ராட்சியத்தை ஆழ்வதற்காக அல்ல
Add caption
உயிரே! உன்னோடு வாழ்வதற்காகத்தான்...!
                          * * *


என்னை கைதியாக்கியாவது
பெண்னே நீ என்னைச் சிறையெடு - உன்
இதயச்சிறையை விட
இருண்ட ஆயுள் சிறையிலேயே - வாழ்ந்து
உன் அருகிலேயே மாய்ந்து விடுவேன்...!
                           * * *

BY : எழில் அரசன்.
                                               -ஜனா-


                                                   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *  * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

Saturday, May 15, 2010

சிரிக்கின்றது நம் நாடு..!


ஏதேதோ கனவுகள் கண்டு
எண்ணி வைத்தும் பலனில்லை
தீயாக வந்த யுத்தம் - தன்
திசையை மறந்து பயனிக்க
நம் நாட்டு தமிழனை மட்டும்
வாழ்நாள் அகதியாக்கி விட்டு
நாடோடி நீ என்று
சிரிக்கின்றது நம் நாடு..!



சின்னஞ்சிறு வயதிலேயே
சிரிப்பைக் கூட அடகுவைத்த - எம்
பால் மணம் மாறா பிஞ்சுகளை
அம்மா! என்றழைக்க மறுத்து
அய்யோ! என்றழைக்க வைத்து
ஆயுதக் கல்வியை ஊட்டி
அரசியல் எதிரியாக்கி விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!



கன்னிவெடி தந்த பரிசால்
காலிலோ பாதியில்லை
கைத்தடியின் உதவியால் - தினம்
கையேந்தும் காட்சியைய் கூட
களவாகப் படமெடுத்து - அயல் நாடுகளிடம்
கௌரவப் பிச்சை எடுத்து விட்டு
ஏமார்ந்து விட்ட எம்மைப் பார்த்து
சிரிக்கின்றது நம் நாடு...!



என்ன இது புது ஓசை?
எம் நாட்டு தேசிய கீதம் - அது
வரிகள் இன்றிய இசையனாலும் தமிழனின்
வலிகள் நிறைந்த இசை -இதுவே
அயல் நாடுகள் நம் நிலை கண்டு
பரிதாபத்துடன் பரிசளித்த மல்டிபறள்
அவ் இசையை இசைக்க விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!






யுத்தம் முழங்கும் காலமிது
நித்தம் எம் வாழ்வில்
முத்தமிடவே விழித்தெளும் விலைவாசி
பயங்கர வாதம் ஒழிக என்றால்
பாராளமன்றமே அதிருமே - கேவலம்
விலையேற்றத்திற்காவது
வில்லனாகாமல் - கைகொட்டி
சிரிக்கின்றது நம் நாடு..!







கொடிய கிட்லரே நடுங்கும்
ஜனநாயக நாடாம் நம் நாடு
ஏதேதோ தேர்தல்களாம்
எல்லாமே பித்தலாட்டம் -நாம்
மண்ணுக்குள் போகும் வரை
ஆட வேண்டிய பொம்மலாட்டம் - இதை
சிந்திக்காத எம்மைப் பார்த்து 
சிரிக்கின்றது நம் நாடு..!

Saturday, April 10, 2010

அரபு நாட்டு தேவதை..

சிப்பியின் முத்தொன்று  இடம் மாறி
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?

புண்ணகைத்த உன் திருமுகம் பார்த்தால் - இனி
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.

பூ மலரும் ஓசையும் உன்
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
 நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல 
அகில லோக அழகி என்பதால்...!

உயிர் கொடுத்த அன்னையே...!

அன்னையே!
அன்பான உன் உள்ளம்...
பாசமான உன் பேச்சு.......
இதமான உன் அரவணைப்பு...
சுகமான உன் தாலாட்டு - என......
அனைத்தையும் தொலைத்துவிட்டு
பித்தனாய் அலைகின்றேன் - என்
உறக்கத்தைக் காவல் வைத்து...!

BY :                       
எழில்அரசன்.                                                         
                                                                                                -ஜனா-

என் காதலர் தினம்..!

உலக காதலர்களுக்கு இன்று
காதலர் திருவிழாவாம் - நானும்
காதலியாய் அழைத்திருந்தேன் உன்னையும்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....

எந் நொடியும் உன் நினைவில்
என்னையே மறந்து கடற்கரை மணலில்
காதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....
          நீ உன் காதலனுடன் வருகின்றாய்
          என்று கூடத் தெரியாமல்..!

BY : எழில் அரசன்.
ஜனா

Wednesday, March 3, 2010

பயணங்களின் ஊர்வலம்...!

உலகை சுற்றி சூரியன் பயணம்
உண்மையை மீறி பொய்களும் பயணம்
(கி)ந்த சிந்தனை நாட்டில் பயணம்
மண்ணை மீட்க வன்னிப் பயணம்
மரண ஓலத்தில் அகதியின் பயணம்
அரிசியின் விலையில் அரசியல் பயணம்
அரசியல் வாதியின் கட்சிப் பயணம்...

குடித்தனம் நோக்கிய செலவின் பயணம்
குடித்தவன் உடலில் போதையும் பயணம்
நகரங்கள் தோறும் நரகமாய் பயணம்
நச்சுப் பாம்புகள் கிழக்கில் பயணம்
தமிழினத் தலைவனே எமனாய் பயணம்
தரங்கெட்ட அமைப்புகள் பயணம்
வாய் திறந்தால் வண்முறைப் பயணம்
ஊமை என்றாலும் அடிமைப் பயணம்...

தேர்தல் கால நடிப்புகள் பயணம்
தேசம் என்றால் பிடிப்புகள் பயணம்
மரணம் என்றதும் கண்ணீர் பயணம்
மறுநாளே இறந்தவர் பயணம்
டீனேஜ் என்றால் குறும்புகள் பயணம்
தீ என்றியே புகையும் பயணம்
பெண்களுக்கென்றே கண்களும் பயணம்
பெற்றோர் கதறும் காதலும் பயணம்...

கோடம்பாக்கத்தில் ஹொலிவூட் பயணம்
நடிகைகளை வெறுத்த அடைகளும் பயணம்
சினிமா என்பதே வீண் பயணம்
சிந்திக்காத ரசிகனும் பயணம்
மீண்டும் மீண்டும் தவறுகள் பயணம்
மீள முடியா கொடுமைகளும் பயணம்
இலட்ச்சியம் இல்லாதது உன் பயணம்
அதை அலட்சியம் செய்வதே நம் பயணம்
இதை சொல்லியே களியும் என் பயணம்...!

Friday, February 5, 2010

!....................பிச்சைக்காரன்....................!


உயிரே!
போதை தரும் உன்
பார்வைகள்....!
மயங்க வைக்கும் உன்
பேச்சு....!
திணறடிக்கும் உன்
புண்ணகை....!
தாகமெடுக்கும் உன்
இதல்கள்....!
உயிரூட்டும் உன்
பாசம்....! - என
உருவான உன்னையே
கேட்டுத் தினம் கையேந்தும்
பிச்சைக்காறன் தான் நான்....!
-எழில் அரசன்-

Wednesday, February 3, 2010

பழிவாங்கும் தனிமை..!


தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?

காரணம் தெரியாது ஊமையானேன்
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!

உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!

உன் விழியே பார்த்த
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?

என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?

நீ கற்றுத்தந்த கல்வியெல்லாம்
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?

கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?

வென்றே அழுதுவிடு மனமே
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
By: எழில் அரசன் ஜனா .

Tuesday, February 2, 2010

கொல்லும் நினைவுகள்....


வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!

உன் மௌனங்கள் என்ன?
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட ()றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!

பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!

மறக்கத்தான் முயல்கின்றேன் உன்னை
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?

BY : எழில் அரசன்.
ஜனா

Saturday, January 30, 2010

உன்னோடு நான் கொண்ட காதல்

அன்பே!
புத்தர் உலகில் தோன்றி
புது மார்க்கத்தைத் தான் உருவாக்கினார்..
நீ என் உள்ளத்தில் தோன்றி
புது உலகத்தையே காட்டி விட்டாய்...!

தனித்திருந்த என் இதயத்தில்
கொத்திக் கொத்தி கூடு கட்டி
குடிபுகுந்து வாழ வந்த
மரங்கொத்திப் பறவை நீயே தான்..!


உன்னை முதன் முதலில் பார்த்த போதே
என்னை நானே மறந்து விட்டென்..
அதனால் தான் என் காதலைக்கூட
உன்னிடம் கூற மறந்து விட்டேன்..!


நீ சென்ற பாதைகளே
நின் காதல் ரயில் செல்லும்
பாதைகளாக மாற்றிவிட்டாய்- பெண்ணே
மாறிவிட்டேன் உன் பாதச்சுவடுகள் தேடும் நீளலாக..!


உயிரே!
உன் முகத்தில் வந்து விழும் கூந்தல் கூட
அழகுதானடி நீ அதனை ஒதுக்கி விடும் போது
ஐயோ! எனக்காக தூதுவரும் காதல் பறவையைய்
ஒதுக்காதே! எனக் கூற வருவேன் - இருந்தும்
நீ ஒதுக்கிவிடும் அழகில் மெய் மறந்து நானும் சிலையாக நின்று விடுவேன்


தூக்கம் கூட என்னை விட்டுத் தூரம்
சென்றுவிட்டதால்
விழித்திருந்தே கண்கின்றேன்.- உன்
விம்பத்தை தினம் கனவிலேயே..

BY-எழில் அரசன் - ஜனா