Saturday, May 15, 2010

சிரிக்கின்றது நம் நாடு..!


ஏதேதோ கனவுகள் கண்டு
எண்ணி வைத்தும் பலனில்லை
தீயாக வந்த யுத்தம் - தன்
திசையை மறந்து பயனிக்க
நம் நாட்டு தமிழனை மட்டும்
வாழ்நாள் அகதியாக்கி விட்டு
நாடோடி நீ என்று
சிரிக்கின்றது நம் நாடு..!



சின்னஞ்சிறு வயதிலேயே
சிரிப்பைக் கூட அடகுவைத்த - எம்
பால் மணம் மாறா பிஞ்சுகளை
அம்மா! என்றழைக்க மறுத்து
அய்யோ! என்றழைக்க வைத்து
ஆயுதக் கல்வியை ஊட்டி
அரசியல் எதிரியாக்கி விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!



கன்னிவெடி தந்த பரிசால்
காலிலோ பாதியில்லை
கைத்தடியின் உதவியால் - தினம்
கையேந்தும் காட்சியைய் கூட
களவாகப் படமெடுத்து - அயல் நாடுகளிடம்
கௌரவப் பிச்சை எடுத்து விட்டு
ஏமார்ந்து விட்ட எம்மைப் பார்த்து
சிரிக்கின்றது நம் நாடு...!



என்ன இது புது ஓசை?
எம் நாட்டு தேசிய கீதம் - அது
வரிகள் இன்றிய இசையனாலும் தமிழனின்
வலிகள் நிறைந்த இசை -இதுவே
அயல் நாடுகள் நம் நிலை கண்டு
பரிதாபத்துடன் பரிசளித்த மல்டிபறள்
அவ் இசையை இசைக்க விட்டு
சிரிக்கின்றது நம் நாடு..!






யுத்தம் முழங்கும் காலமிது
நித்தம் எம் வாழ்வில்
முத்தமிடவே விழித்தெளும் விலைவாசி
பயங்கர வாதம் ஒழிக என்றால்
பாராளமன்றமே அதிருமே - கேவலம்
விலையேற்றத்திற்காவது
வில்லனாகாமல் - கைகொட்டி
சிரிக்கின்றது நம் நாடு..!







கொடிய கிட்லரே நடுங்கும்
ஜனநாயக நாடாம் நம் நாடு
ஏதேதோ தேர்தல்களாம்
எல்லாமே பித்தலாட்டம் -நாம்
மண்ணுக்குள் போகும் வரை
ஆட வேண்டிய பொம்மலாட்டம் - இதை
சிந்திக்காத எம்மைப் பார்த்து 
சிரிக்கின்றது நம் நாடு..!

No comments:

Post a Comment