Friday, February 5, 2010

!....................பிச்சைக்காரன்....................!


உயிரே!
போதை தரும் உன்
பார்வைகள்....!
மயங்க வைக்கும் உன்
பேச்சு....!
திணறடிக்கும் உன்
புண்ணகை....!
தாகமெடுக்கும் உன்
இதல்கள்....!
உயிரூட்டும் உன்
பாசம்....! - என
உருவான உன்னையே
கேட்டுத் தினம் கையேந்தும்
பிச்சைக்காறன் தான் நான்....!
-எழில் அரசன்-

Wednesday, February 3, 2010

பழிவாங்கும் தனிமை..!


தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?

காரணம் தெரியாது ஊமையானேன்
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!

உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!

உன் விழியே பார்த்த
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?

என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?

நீ கற்றுத்தந்த கல்வியெல்லாம்
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?

கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?

வென்றே அழுதுவிடு மனமே
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
By: எழில் அரசன் ஜனா .

Tuesday, February 2, 2010

கொல்லும் நினைவுகள்....


வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!

உன் மௌனங்கள் என்ன?
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட ()றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!

பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!

மறக்கத்தான் முயல்கின்றேன் உன்னை
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?

BY : எழில் அரசன்.
ஜனா