Saturday, April 10, 2010

அரபு நாட்டு தேவதை..

சிப்பியின் முத்தொன்று  இடம் மாறி
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?

புண்ணகைத்த உன் திருமுகம் பார்த்தால் - இனி
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.

பூ மலரும் ஓசையும் உன்
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
 நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல 
அகில லோக அழகி என்பதால்...!

உயிர் கொடுத்த அன்னையே...!

அன்னையே!
அன்பான உன் உள்ளம்...
பாசமான உன் பேச்சு.......
இதமான உன் அரவணைப்பு...
சுகமான உன் தாலாட்டு - என......
அனைத்தையும் தொலைத்துவிட்டு
பித்தனாய் அலைகின்றேன் - என்
உறக்கத்தைக் காவல் வைத்து...!

BY :                       
எழில்அரசன்.                                                         
                                                                                                -ஜனா-

என் காதலர் தினம்..!

உலக காதலர்களுக்கு இன்று
காதலர் திருவிழாவாம் - நானும்
காதலியாய் அழைத்திருந்தேன் உன்னையும்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....

எந் நொடியும் உன் நினைவில்
என்னையே மறந்து கடற்கரை மணலில்
காதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....
          நீ உன் காதலனுடன் வருகின்றாய்
          என்று கூடத் தெரியாமல்..!

BY : எழில் அரசன்.
ஜனா