Saturday, April 10, 2010

அரபு நாட்டு தேவதை..

சிப்பியின் முத்தொன்று  இடம் மாறி
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?

புண்ணகைத்த உன் திருமுகம் பார்த்தால் - இனி
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.

பூ மலரும் ஓசையும் உன்
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
 நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல 
அகில லோக அழகி என்பதால்...!

No comments:

Post a Comment