Monday, January 24, 2011

அகதியான என் கதை..!

 (2011ஆம் ஆண்டு அழைத்து வந்த பேரும் மழைவீழ்ச்சியினால் 
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் அது அளித்த அழிவின் அவலமும்....!


ஆனந்தம் பொங்கும் வேளை
வருடப்பிறப்பு விருந்தினராய்
புதுமணை விட்டு வெளியேறும்
புதுமணப் பெண்போல் - அந்த
ஆழ் கடலே பெருக்கெடுத்ததாய்
ஆறுகள் எல்லாம் செருக்கெடுத்து
என் மணை தேடி வந்து என்னையே
ஏந்தும் கொலம்தான் என்னவோ....?





மீண்டும் ஒரு சுணாமியோ?
மீழ முடியாதோ? தலை குடைந்தேன்-நான்
வெள்ளம் தலைக்கு மேலே
போவதால் நிலை குலைந்தேன் - இனி
சான் என்ன? முழம் என்ன?
உயிர் என்ன்? உடமை என்ன?
இதயம் பொறுக்காமல் நானும்
இல்லத்துக்கு விடை கொடுத்தேன்....!






பார் முழுதும் கார் மேகம்.
அங்கும் இங்கும் ஓடி
கதறி அழுது கண்ணீர் விட ..
யார் அடித்து கொடுமை செய்ததோ?
மேகம் விட்ட கண்ணீர் கண்டு
மோகம் கொண்ட காற்றும்
இதயம் நொந்து அனுதாபத்தில்
ஆடியது புயல் நடனம்.......!







பார்த்திருக்கவே பறந்தது
பட்டம் பூச்சியாய் கூரைகள்..
தைரியமாய் நின்ற மரமும்
தறிகெட்டு தடுமாறி விழுந்தது..
பலர் பதுக்கி வைத்த பொக்கிஷங்களும்
பாரபட்சம் இன்றி வெளிவர..
அதையும் உண்ணவே ஓடிவந்தன
ஆக்ரோசமாய் சுழிகள்....!







அங்கும் இங்கும் ஓடிச்சென்ற
அயலவர்களை காப்பேனா?
அமைதியாய் வாழவைத்த - என்
அரன்மணையைய்த் தான் பார்பேனா?
உயிர் காத்து நான் ஒடியதால்
உடமைகளும் வீடுகளும் என்னை
தலைமூழ்கிக் கொண்டே
வந்தன வரிசையாக என் பின்னால்...!








ஆலயம் தேடி தஞ்சமடைய
அவலம்! அங்கும் துவசம் செய்தது
கடவுள்களை காவிய நீருடன்
நானும் அப்பாவியாய் சென்றேன்
அலை சுமர்ந்த பல்லாக்கிலே....
எப்படியோ!கடவுள்களை விட்டு
கரை தப்பி உயிர் பிளைத்தேன்
கடவுளே! நன்றி...!.









இஸ்டப்பட்டு வந்தடைந்தேன்
இந்துக்கல்லூரி முகாமுக்குள்
மழைக்கு கூட கல்லூரி வாயிலை
மிதியாதவன் என்ற வழக்கையும்
விதியின் சதியால் வென்று விட்டேன்
எனக்கு மட்டும்தானோ? வெள்ளம்
என்று எண்னி நிமிர்ந்தேன் - என்
தேசமே இங்குதான் அகதியானது....!








ஆறு அடி ஏழு அடி
ஆழம் என்று மூழ்கியோர்
அழந்ததை கூற...
அவனைக் காணவில்லையே! - என
அவளும் வாய் கிழித்து கதறினாள்...
அப்படி இப்படி என்று
அழிவடைந்த உடமைகளும்
அதிகரித்தது செத விபரத்தை....!










ஆறு நாள் ஆர்ப்பாட்டம்
அழிந்தது முழு நாடும்
அங்கும் இங்கும் ஓடி ஓடி
ஒளிந்து கொண்டது வெள்ள நீரும்
ஆமை வேகத்தில் பாடி பாடி
வந்தன அனுதாபங்களும்....
அணர்த்த நிவாரணம் தேடி தேடியே
அலைக்களிந்தது சொம்பேறி
அகதியான எனது வாழ்வும்..!
      
                                                                                         By: எழில் அரசன் ஜனா .

No comments:

Post a Comment