Saturday, April 10, 2010

அரபு நாட்டு தேவதை..

சிப்பியின் முத்தொன்று  இடம் மாறி
முகத்திரைக்குள் குடி கொன்டதோ?
செவ்விதழ் ரோஜாக்கள் - இம்
மங்கையின் மீது மோகம் கொண்டு
அவள் முகத்தை தழுவிக் கொன்டதோ..?

புண்ணகைத்த உன் திருமுகம் பார்த்தால் - இனி
புண்ணகைக்க மாட்டாள் அந்த நிலா
உன் விழி பார்த்த மனிதன் - இனி
ஏழரை சனி பிடித்த பித்தன்தான்.

பூ மலரும் ஓசையும் உன்
மௌனம் கலைந்த வார்த்தையின்
அதிர்வும் ஒன்றுதானே பெண்னே!
 நீ ஒன்றும் அறபு நாட்டு அழகியல்ல 
அகில லோக அழகி என்பதால்...!

உயிர் கொடுத்த அன்னையே...!

அன்னையே!
அன்பான உன் உள்ளம்...
பாசமான உன் பேச்சு.......
இதமான உன் அரவணைப்பு...
சுகமான உன் தாலாட்டு - என......
அனைத்தையும் தொலைத்துவிட்டு
பித்தனாய் அலைகின்றேன் - என்
உறக்கத்தைக் காவல் வைத்து...!

BY :                       
எழில்அரசன்.                                                         
                                                                                                -ஜனா-

என் காதலர் தினம்..!

உலக காதலர்களுக்கு இன்று
காதலர் திருவிழாவாம் - நானும்
காதலியாய் அழைத்திருந்தேன் உன்னையும்.
நீயும் வருவாய் என்ற நம்பிக்கையில்.....

எந் நொடியும் உன் நினைவில்
என்னையே மறந்து கடற்கரை மணலில்
காதலை சொல்ல பூவுடன் காத்திருக்கிறேன்....
          நீ உன் காதலனுடன் வருகின்றாய்
          என்று கூடத் தெரியாமல்..!

BY : எழில் அரசன்.
ஜனா

Wednesday, March 3, 2010

பயணங்களின் ஊர்வலம்...!

உலகை சுற்றி சூரியன் பயணம்
உண்மையை மீறி பொய்களும் பயணம்
(கி)ந்த சிந்தனை நாட்டில் பயணம்
மண்ணை மீட்க வன்னிப் பயணம்
மரண ஓலத்தில் அகதியின் பயணம்
அரிசியின் விலையில் அரசியல் பயணம்
அரசியல் வாதியின் கட்சிப் பயணம்...

குடித்தனம் நோக்கிய செலவின் பயணம்
குடித்தவன் உடலில் போதையும் பயணம்
நகரங்கள் தோறும் நரகமாய் பயணம்
நச்சுப் பாம்புகள் கிழக்கில் பயணம்
தமிழினத் தலைவனே எமனாய் பயணம்
தரங்கெட்ட அமைப்புகள் பயணம்
வாய் திறந்தால் வண்முறைப் பயணம்
ஊமை என்றாலும் அடிமைப் பயணம்...

தேர்தல் கால நடிப்புகள் பயணம்
தேசம் என்றால் பிடிப்புகள் பயணம்
மரணம் என்றதும் கண்ணீர் பயணம்
மறுநாளே இறந்தவர் பயணம்
டீனேஜ் என்றால் குறும்புகள் பயணம்
தீ என்றியே புகையும் பயணம்
பெண்களுக்கென்றே கண்களும் பயணம்
பெற்றோர் கதறும் காதலும் பயணம்...

கோடம்பாக்கத்தில் ஹொலிவூட் பயணம்
நடிகைகளை வெறுத்த அடைகளும் பயணம்
சினிமா என்பதே வீண் பயணம்
சிந்திக்காத ரசிகனும் பயணம்
மீண்டும் மீண்டும் தவறுகள் பயணம்
மீள முடியா கொடுமைகளும் பயணம்
இலட்ச்சியம் இல்லாதது உன் பயணம்
அதை அலட்சியம் செய்வதே நம் பயணம்
இதை சொல்லியே களியும் என் பயணம்...!

Friday, February 5, 2010

!....................பிச்சைக்காரன்....................!


உயிரே!
போதை தரும் உன்
பார்வைகள்....!
மயங்க வைக்கும் உன்
பேச்சு....!
திணறடிக்கும் உன்
புண்ணகை....!
தாகமெடுக்கும் உன்
இதல்கள்....!
உயிரூட்டும் உன்
பாசம்....! - என
உருவான உன்னையே
கேட்டுத் தினம் கையேந்தும்
பிச்சைக்காறன் தான் நான்....!
-எழில் அரசன்-

Wednesday, February 3, 2010

பழிவாங்கும் தனிமை..!


தனிமை என்னும் வியாதி
தாவிக்கொன்டதோ? என் மனதில்..
தாயை பறிகொடுத்த சேயாக
தனிமையடைந்த என் மனம்
பரிதவிக்கும் பரிதாபம் தான் எனோ?

காரணம் தெரியாது ஊமையானேன்
காக்கை போன்றே புலம்பிக்
கரைகின்றேன் - என்னோடு
கூடி அளத்தான் யாருமில்லை..!

உன் தோள் சாய்ந்ததால்
என் தலை கொய்யப்படுகின்றதே...
நீ ஊட்டிய அமுதம் கூட - இன்று
தீ உண்ட அமுதாய் எரிகின்றதே..!

உன் விழியே பார்த்த
என் விழிகள் இன்று குறுடானதேனோ?
உன் குறும் செய்தியையே உண்னும்
என் தொலைபேசி இன்று பட்டினி கிடப்பதேனோ?

என் நோட்டில் நீ எழுதிய
உன் எழுத்துக்கள் - என்
கண் முன்னே எரிவதேனோ?

நீ கற்றுத்தந்த கல்வியெல்லாம்
கற்று வந்து கடத்திச்செல்வதேனோ?
என் கோபம் தொட்டதால்தான் - என்னை
உன் சாபம் கொல்கின்றதோ?

கோடை கண்ட மகிழ்ச்சியில்
வற்றிப்போன என் கண்ணீர் - இன்று
மாரி பெய்யும் மழையாக
தறிகெட்டுப் பொலிவதேனோ?

வென்றே அழுதுவிடு மனமே
ஓசையுடன் அடங்கட்டும் - கொடும்
பாவச் சிலுவையால்
படைக்கப்பட்ட என் உயிர்..!
By: எழில் அரசன் ஜனா .

Tuesday, February 2, 2010

கொல்லும் நினைவுகள்....


வெடித்து சிதறுகிறது உறக்கம்
என்னை நீ தழுவாத போதும்
உன் நினைவுகள் என்னை தழுவுகின்றன..
பொறுமையாய் நான் இருந்தாலும்
கதறி அழுகின்றது இதயம்..!

உன் மௌனங்கள் என்ன?
உயர்ந்து வாழும் நிலவா?
மறந்து கூட ()றங்க மாட்டெங்குதே!
புலம்புகிறேன் நானும் - உனை
தொடத்தவிக்கும் குழந்தையாக..!

பறிகொடுத்தேன் கற்றுக்கு
பருத்தியாகிய உன்னை..
பரிதவிக்கின்றேன் நானும்
அனாதையான இலங்கை அகதியாக..!

மறக்கத்தான் முயல்கின்றேன் உன்னை
அதனால் தானோ வெறுக்கின்றேன் என்னை?
மறவாத உன் நினைவால்
ஊசலாடும் என் உயிருக்காக
திறவாத பெண்னே உன் மனம்..?

BY : எழில் அரசன்.
ஜனா

Saturday, January 30, 2010

உன்னோடு நான் கொண்ட காதல்

அன்பே!
புத்தர் உலகில் தோன்றி
புது மார்க்கத்தைத் தான் உருவாக்கினார்..
நீ என் உள்ளத்தில் தோன்றி
புது உலகத்தையே காட்டி விட்டாய்...!

தனித்திருந்த என் இதயத்தில்
கொத்திக் கொத்தி கூடு கட்டி
குடிபுகுந்து வாழ வந்த
மரங்கொத்திப் பறவை நீயே தான்..!


உன்னை முதன் முதலில் பார்த்த போதே
என்னை நானே மறந்து விட்டென்..
அதனால் தான் என் காதலைக்கூட
உன்னிடம் கூற மறந்து விட்டேன்..!


நீ சென்ற பாதைகளே
நின் காதல் ரயில் செல்லும்
பாதைகளாக மாற்றிவிட்டாய்- பெண்ணே
மாறிவிட்டேன் உன் பாதச்சுவடுகள் தேடும் நீளலாக..!


உயிரே!
உன் முகத்தில் வந்து விழும் கூந்தல் கூட
அழகுதானடி நீ அதனை ஒதுக்கி விடும் போது
ஐயோ! எனக்காக தூதுவரும் காதல் பறவையைய்
ஒதுக்காதே! எனக் கூற வருவேன் - இருந்தும்
நீ ஒதுக்கிவிடும் அழகில் மெய் மறந்து நானும் சிலையாக நின்று விடுவேன்


தூக்கம் கூட என்னை விட்டுத் தூரம்
சென்றுவிட்டதால்
விழித்திருந்தே கண்கின்றேன்.- உன்
விம்பத்தை தினம் கனவிலேயே..

BY-எழில் அரசன் - ஜனா